5PK Quiz போட்டி - 3

March 23, 2016

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

@CashMintIN மற்றும் @Kryes இணைந்து நடத்தும் மாபெரும் தமிழ் விளையாட்டுப் போட்டிகள்​

போட்டி - 3

தமிழ் இலக்கியம் மணிமேகலையில் இருந்து 10 கேள்விகள் ( Choose the Best Answer )

போட்டி நாள்: 26.03.2016 இந்திய நேரம் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகும். 

நேர அடிப்படையில் முதலில் 10 கேள்விகளுக்கும் சரியான பதில் அளிப்பவர்கள் வெற்றியாளர்கள்.

20 வெற்றியாளர்கள் வரும் வரை போட்டி தொடரும்.

 

பரிசுகள்:

வெற்றியாளர்களுக்கு தலா 150 ரூ Amazon/Flipkart Gift Voucher கிடைக்கும்

மொத்த பரிசுத் தொகை - 3000 ரூ

 

போட்டி 3 முடிந்த பிறகு போட்டி 4 க்கான தேதிகள் அறிவிக்கப்படும்

போட்டி 4ல் அனைவரும் ஆர்வத்துக்காக கலந்து கொள்ளலாம்! ஆனால் போட்டி-3 ல் வெற்றி பெறும் 20 நபர்கள் மட்டுமே, "பேராடுகளத்தில்" பரிசு பெற முடியும்:)

அடுத்த போட்டியில் நேர அடிப்படையில் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் அளித்த முதல் 3 நபர்களே வெற்றியாளர்கள்.

போட்டி 4 க்கான பரிசுகள், தலா ரூ 500 Amazon/Flipkart Gift Voucher மூன்று நபர்களுக்கு.

......................................................................................................................................................

CONTEST CLOSED

....................................................................................................................................................

Right Answers

 

1. தெய்வம்:

மணிமேகலை கையில் இருந்த பாத்திரம்= அமுதசுரபி; 

ஆனால் அவளுக்கும் முன்பே.. அதை வைத்திருந்தவன் ஆபுத்திரன்!

அப் பாத்திரத்தை, அவனுக்கு.. எந்த ஊரில், எந்த தெய்வம் வழங்கிற்று?

b. மதுரை, சிந்தா தேவி

 

 

2. நாடு:

சிலப்பதிகாரம்/ மணிமேகலை, இரட்டைக் காப்பியங்கள்!

சிலப்பதிகாரக் கதையின் தலைவி செல்லும் நாடுகளுக்கு,

மணிமேகலைக் கதையின் தலைவியும் செல்கிறாள்,

ஒரே ஒரு நாட்டைத் தவிர! அது எந்த நாடு?

d. பாண்டிய நாடு

 

3. அரசன்:

சிலப்பதிகார, கோவலன் - கண்ணகி - மாதவி காலத்திலும்

அவர்கள் புதல்வி, மணிமேகலையின் காலத்திலும் 

அரசாண்ட அதே மன்னன் யார்? அவன் மேல் பாடப்பட்ட நூல் எது?

b. சேரன் செங்குட்டுவன், பதிற்றுப் பத்து

 

 

4. தாய் - தந்தை:

சீத்தலைச் சாத்தனாரின் கெழுதகை நண்பரான, 

இளங்கோவடிகளின் அம்மா-அப்பா யார்?

a. மணக்கிள்ளி, குடக்கோ நெடுஞ்சேரலாதன் 

 

 

5. சமயம்:

சிலப்பதிகாரம், எந்தச் சமயத்தையும் சாராது, அனைத்துமே பேசி, சமணத்தை நயம்பட முன்னிறுத்தும்.

மணிமேகலை, நேரடியாகவே, ஒரு சமயத்தை முன்னிறுத்தும்; அது என்ன சமயம்?

b. மகாயான பெளத்தம்

 

 

6. அந்தணர்களின், பசுக்கொலை வேள்வி:

ஆபுத்திரன் என்ற நல்ல அந்தணச் சிறுவன்; மணிமேகலையின் கைப்பாத்திரத்துக்கு முதற் சொந்தக்காரன்!

அவன் சாதியினர் செய்த பசுக்கொலை யாகம் பொறுக்காமல், வாயிலா உயிர்களைக் காத்தான்.

அதனால் ஒதுக்கப்பட்டு, மதுரைக்கு விரட்டி அடிக்கப்பட்டான். பெற்றோரே கைவிட்டனர்:(

ஆபுத்திரனின் பெற்றோர்: பெற்ற தந்தை - வளர்த்த தந்தை யார்?

a. அபஞ்சிகன், பூதி

 

7. முற்பிறவி:

அப்பா கோவலன் - மகள் மணிமேகலையின் முற்பிறவிப் பெயர்கள் என்ன?

c. பரதன், இலக்குமி

 

 

8. சமயக் கணக்கர் தம், திறம் கேட்ட காதை:

மணிமேகலை, ஆண் வேடமிட்டுச், சமயக் கணக்கர்கள் கூறும் மத வாதங்களைக் கேட்கிறாள்!

பின் வருவனவற்றுள், எந்தெந்த மதக் கோட்பாடுகளைக் கேட்கிறாள்? Choose ALL the correct answers!

a. ஆசீவகம்

b. வேத/ பிராமண மதம்

c. சாருவாகம்/ பூத வாதம்

 

 

9. கடற்கோள்/ சுனாமி:

கடற் கோள் எனும் ஆழிப் பேரலையால், பூம்புகாரின் ஒரு பகுதி அழிந்தது.

மணிமேகலையின் தாய் மாதவி, மற்றும் பலரும் வேறு ஊர்களுக்குக் குடி பெயர்கிறார்கள்.

எந்தெந்த ஊர்களுக்குப் பெயர்கிறார்கள்? Choose ALL the correct answers!

b. காஞ்சி

c. நாகை/ நீர்ப்பெயற்று

d. உறையூர்

 

10. காப்பியத் தமிழ்:

மணிமேகலைக் காப்பியத்தின் முதல் வரி என்ன?

​​c உலகம் திரியா ஓங்கு உயர் விழுச் சீர்

 

...........................................................................................................................................................................................

 

WINNERS AND PRIZE DETAILS WILL BE RELEASED TOMORROW

 

read other news...

Steps to Earn Cashback

1. Join CashMint FREE

2. Visit Retailers via CashMint & Shop

3. Earn Cashback

4. Transfer to Bank as REAL CASH

Featured Stores

Top Stores

New Stores