#5PK Quiz 4

March 30, 2016

 

                           

போட்டி நாள் : 02.04.2016 (சனிக்கிழமை)

நேரம்        : இரவு 8 மணி

10 கேள்விகள் 10 வெற்றியாளர்கள்

போட்டியில் அனைவரும் கலந்துகொள்ளலாம், Quiz-3 ல் வெற்றிபெற்ற 20 வெற்றியாளர்களும் இதில் கலந்துகொள்வர், 

வெற்றியாளர்கள்:

அனைத்து கேள்விகளுக்கும் நேர அடிப்படையில் முதலில் பதில் அளிப்பவர்களே வெற்றியாளர்கள்.

மொத்தம் 10 வெற்றியாளர்கள். இவர்களில் 3 பேர் போட்டி 3 ல் வெற்றி பெற்ற 20 நபர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர்.

அடுத்த 7 வெற்றியாளர்கள் இந்த 20 நபர்களில் இருந்து தேர்வு செய்யப்படமாட்டார், அந்த 20 நபர்கள் தவிர்த்து மற்ற புதியவர்கள், சென்ற போட்டியில் பரிசு பெறாதவர்களுக்கே.

கேள்வியை கவனமாக வாசித்து பதில் எழுதவும்

பரிசுகள்:

முதல் 3 நபர்களுக்கு cashmint வழங்கும் 300 ரூபாய் மதிப்பிலான பரிசு (flipkart/amazon gift card ஆக வாங்கிக்கொள்ளலாம்)

அந்த 3 பேருக்கும் கூடுதலாக ஒவ்வொருவருக்கும் ரூபாய் 500 மதிப்பிலான அவர்கள் விரும்பும் புத்தகத்தைப் பரிசளிக்க ஒரு தமிழ் ஆர்வலர் முன்வந்துள்ளார்

மற்ற 7 வெற்றியாளர்களுக்கும் ரூபாய் 200 மதிப்பிலான பரிசை (Amazon/flipkart Gift Voucher ) @itsbhava என்ற கீச்சர் வழங்குகிறார்

 

.............................................................................................................................................................................

(முற்குறிப்பு: இவ் வினாக்களின் நோக்கம்: 

"மூலநூல்" வரிகளை, நேரடியாக வாசிக்கும் பழக்கத்தை, ஊக்குவித்தலே!

 

தமிழ் மொழியில், பின்னாள் இடைச்செருகல்களும், 

உரையாசிரியர்.. தம் சமயப் பிடித்தங்களை, மூலநூல் உரையில் ஏற்றிவிடும் போக்கை "உணர்ந்து" கொண்டு,

உரையை மட்டுமே நம்பாமல்,

மூலநூல் தரவுகளை / செய்யுளை, "நேரடியாக அணுகும்" பழக்கம் வளர்ப்போம்:)

 

இதோ.. 5pk மணிமேகலையின் கடைசிப் போட்டி = பேராடுகளம்! வெற்றிக்கு வாழ்த்துக்கள்!

------------------------------------------------------------------------------------------------------------------

 

For Better undersatanding of Question.. we have listed All Questions here.

Plz Submit your answers in Google Forms only.

 

CLICK HERE TO SUBMIT THE ANSWERS

.......................................................................................................................................................

 

1. புத்தரின் திருவடிகளை, மணிமேகலைப் பொண்ணு வணங்குவதாக அமைந்த, மூலநூல் வரி எது?

     மாரனை வெல்லும் வீர நின்னடி, பெரியோய் நின்னடி!

 

 

2. மணிமேகலையின் ஆரம்பப் பதிகம்: ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் எழுதியதற்கு மாறாக.. 

ஒரு காக்காய் கமண்டலம் தட்டிவிட, காவிரி ஆறு பெருகி ஓடியது 

என்ற பொய்யான புராணம் சொருகும் வரி என்ன?

(பலரும், இந்த ஹிந்து புராணத்தை.. ஒரு புத்த நூலே சொல்லிவிட்டதாக நினைத்துக் கொள்ளும் அபாயம்)

   கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை

 

 

3. நூலின் பெயர்:

மணிமேகலைக் காப்பியத்துக்கு, இன்னொரு பெயரும் உண்டு! அது என்ன?

  மணிமேகலை துறவு

 

 

 

4. நூலின் வடிவம்:

மணிமேகலை நூலின் வடிவம், எந்தச் செய்யுள் வகையால் ஆனது?

  நிலை மண்டில ஆசிரியப்பா 

 

5. நூல் காட்டும் மக்கள்:

சேர வஞ்சி நகர வீதிகளில்,  மணிமேகலை.. பல வகையான மக்களைப் பார்க்கிறாள்!

கீழே உள்ள செய்யுளைப் படிச்சிப் பாருங்க; 

பதம் பிரிச்சி இருப்பதாலும், ரெண்டு ரெண்டு வரியா காபி உறிஞ்சுதல் போல் இருப்பதாலும், உங்களுக்கே புரிஞ்சிடும்!

 

பல மீன் விலைஞர், வெள் உப்புப் பகருநர்,

கள் நொடை ஆட்டியர், காழியர், கூவியர்,

மரம் கொல் தச்சரும், மண் ஈட்டாளரும்,

மாலைக் காரரும், காலக் கணிதரும்...

 

இதில் "காழியர்/கூவியர்" என்று வருது அல்லவா? அவர்கள் என்ன வணிகம் செய்கிறார்கள்?

 

 

 பிட்டு/அப்பம் விற்போர்

 

6. இல்லாதார் துயரம் போக்காமல்..

இருப்பவர்களுக்கே, மீண்டும் மீண்டும் கொடுப்போர்= அறத்தை விலை பேசும் கும்பல்!

சுளீர் சாட்டையடி! - இதன் மூலநூல் வரிகள் என்ன?

 ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்

 

7. மணிமேகலை காலத்தில், வள்ளுவன்= அறிவு அலுவலன்; மதவாதிகளையே Moderate செய்பவன்;

"சமயப் பட்டிமன்றம், பாங்கு அறிந்து செய்க! இல்லையேல் அகன்று விடுக!" எ. அதட்டும் அளவுக்கு அதிகாரம் உள்ள அரசுப் பணி= வள்ளுவன்! 

பறையன் வள்ளுவனின் "பணி மேன்மை" காட்டும் மணிமேகலை, மூலநூல் வரிகள் என்ன?

 முரசு கடிப் பிடூஉம் முதுகுடிப் பிறந்தோன்

 

 

8. இயற்கைக்கு மாறாக, தெய்வம் உதவுமா?:

சக்கரவாளக் கோட்டத்தில், இறந்த மகனை, உயிர்ப்பித்துத் தர வேண்டிய தாய் யார்?

புத்தரைப் போலவே,

இயற்கைக்கு மாறான மந்திரத்தால், பலனில்லை எ, அத் தாயை ஆறுதல் செய்த தெய்வம் யார்? 

 தாய்= கோதமை; தெய்வம்= சம்பாபதி

 

 

9. பிராமணீய/ வேத மதம்:

மணிமேகலை, ஆண் வேடம் புனைந்து, 10 சமயங்களின் கருத்துக்களைக் கேட்கிறாள்!

ஆனால், ஒருவரோடு கூட எதிர்வாதம் புரியாமல், கேட்டுக்கொண்டு மட்டும் நகர்ந்து விடுகிறாள்.

 

"எல்லா மார்க்கமும் கேட்டு, நன்று அல! ஆயினும், நான் மாறு உரைக்கிலேன்" 

..என்று அவளே சொல்கிறாள்; அப்படிப்பட்ட அவளே..

ஒரே மதமான பிராமணீய/ வேத மதத்தை மட்டும், கடுமை காட்டி மறுக்கிறாள், புத்தரைப் போலவே!

 

எங்கள் வேத மதம், எப்போது தோன்றியது? என்று யாராலும் சொல்ல முடியாது!

வேதத்துக்கு ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை! 

.. போன்ற பொய்யான துதிபாடல் கேட்டு வெறுத்துப் போய்,

இவர்கள் கூறுவதற்கு இணங்கவே கூடாது எ. கடுமை காட்டுகிறாள்; "மூலநூல்" வரி என்ன?

 

 

 வேதியன் உரையின் கேட்டு, எத் திறத்தினும் இசையாது, இவர் உரை!

 

 

 

10. மணிமேகலை குடும்பம்: 

இடமும், நடுவும், வலமும் பொருத்துக:)

 

10. அம்மா     A. இலக்குமிக்கு,           W. அத்திபதி

20. அப்பா      B. இராகுலனுக்கு,         X. அமுதபதி

30. அத்தை   C. மணிமேகலைக்கு,   Y. மணக்கிள்ளி

40. தோழி     D. உதயகுமரனுக்கு,     Z. சுதமதி

 

 10AX,   20BW,  30DY,  40CZ

 

..............................................................................................................................................

 

WINNERS

 

5PK Quiz-4  இனிதே முடிந்தது, கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள், 

வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்..

Quiz-3 வெற்றியாளர்களுக்கான போட்டியாய் உருவாக்கப்பட்டது, இருந்தும் 

மற்றவர்களுக்கும் தனிப்பரிசு வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டது. 

முதல் போட்டியின் வெற்றியாளர்களுக்கே கடுமையான போட்டியாய் 

இருந்தது, 

10/10 எடுப்பவரே வெற்றியாளர்

3 பேருக்கு மேல் 10/10 இருந்தால் நேர அடிப்படையில் தேர்வு

10/10 இல்லாதபட்சத்தில் மதிப்பெண், நேர அடிப்படையில் தேர்வு

Quiz-3 வெற்றியாளர்கள் 20 பேரில் 

@ktrsivakasi

@MissLoochu

@Himathree

இம்மூவரும் முதலாவதாக 10/10 சரியான விடை எழுதி பரிசு வெல்கிறார்கள்

 

அடுத்த இடங்களில்

@janucece ( 10) 

@kaviintamizh (9)

@itsbhava (9) 

@itzkuzhali (9)

@jroldmonk (9)

@umakrishh  (9)

@GOVINDARAJEN (9)

@vel_Indian (9)

@killysamy (9)

@i_am__karthik (9)

@meenammakayal (9)

@AasifNiyaz (8)

@naanraman(8)

இவர்கள் அனைவருக்கும் நன்றிகள்... )) 

 

Quiz -3 வெற்றியாளர்கள் தவிர்த்து மற்ற 7 வெற்றியாளர்களும் 

தேர்வுசெய்யப்பட்டார்கள் 

@S_S_Saravanan (10)

@mythili_br (9)

@casreedhar (9)

chittooatthiappan@gmail.com (9)

@rajradje (8)

@Kavin0209 (8) 

@dhanalakshmirs (8)

இந்த வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துக்கள் )

...............................................................................................................................................................

அன்புள்ள தமிழன்பரே, நண்பரே..

5pk மணிமேகலை = 4 போட்டிகளில் கலந்து கொண்டமைக்கு, நனி மிகு நன்றி:)

 

தமிழில், மதம் மூலமாய்ப் பின்னாள் சொருகல்கள்! 

என்வே உரையை மட்டுமே அதிகம் நம்பாமல்,

மூலநூல் தரவுகளை, "நேரடியாக அணுகும்" பழக்கம், வளர்த்துக் கொள்வோம்:)

 

தமிழ் "மறைப்பு" சிறுகச் சிறுக விலக்குவோம்!

வெற்றிக்கு வாழ்த்துக்கள் - உங்களுக்கு மட்டுமல்ல! தமிழுக்கும் வெற்றியே!:)

......................................................................................................................................................

All updates Regarding this contest will be updated here only..

read other news...

Steps to Earn Cashback

1. Join CashMint FREE

2. Visit Retailers via CashMint & Shop

3. Earn Cashback

4. Transfer to Bank as REAL CASH

Featured Stores

Top Stores

New Stores