இன்றைய #5pkquiz போட்டிக்கான கேள்வி இரவு 8 மணிக்கு கேட்கப்படும்.
மொத்தப் பத்து கேள்விகள்.
நேற்றைய போட்டியில் வென்ற அனைவருக்கும் பரிசுகள் அறிவிக்கப்பட்டது.இன்றைய போட்டியில் 10 வெற்றியாளர்கள் மட்டுமே. போட்டி ஆரம்பிக்கும் நேரத்தில் இருந்து முதலில் 10 கேள்விக்கும் சரியான பதில் சொல்பவர்க்கே பரிசு.
மொத்த பரிசுத்தொகை 3000 ரூபாய். வெற்றியாளர் ஒருவருக்கு 300 ரூபாய் மதிப்பிலான பரிசுகள் கிடைக்கும்.
போட்டி முடிந்தவுடன் வெற்றியாளர்களும், சரியான பதில்களும் அறிவிக்கப்படும்.
நீங்கள் பதிவு செய்யும் பதில்களை குறித்துவைத்துக் கொள்ளுங்கள்.
............................................................................................................................................
Competition Over. : WINNERS WILL BE ANOUNCED SOON
............................................................................................................................................
Right Answers :)
1. மணிமேகலைக்கு, "அமுதசுரபி" உள்ள குளத்தைக் காட்டும் தெய்வம் யார்?
தீவதிலகை
2. மணிமேகலை, மனத்துள் 'லேசாக'க் காதலிக்கும் ஆணழகன்.. சோழ இளவரசன்!
அவன் "இயற்பெயர் - முற்பிறவிப்" பெயர்கள் என்ன?
உதயகுமரன் - இராகுலன்
3. மணிமேகலையும் அவள் தோழியும்..
ஓர் இரவு தங்கிய சுடுகாடு/"இடு"காட்டின் பெயர் என்ன?
சக்கரவாளக் கோட்டம்
4. ஈழத்தின் யாழ்ப்பாணத் தீவுகளில் ஒன்றான நயினாத் தீவு, அன்றைய மணிபல்லவம்!
சோழனின் பூம்புகாரில் இருந்து மணிபல்லவம்.. எவ்வளவு "தொலைவு"? (காப்பியத்தில் வரும் குறிப்பு)
30 யோசனை
5. பெளத்தக் காப்பியமான மணிமேகலை, தமிழ் வானியல் கணிதத்தின், "முதல் நட்சத்திரம்" என்று எதைக் குறிக்கிறது?
கார்த்திகை
6. கோவலன் இறந்து, மாதவி/ மணிமேகலை தனித்து வாழும் போது..
சோழ நாட்டை ஆண்ட அரசன் யார்?
மாவண் கிள்ளி
7. ஆபுத்திரன் பெற்றதே முதல் அமுதசுரபி! அந்த அந்தணச் சிறுவன், அவன் இனத்தாரால் பட்ட கொடுமைகள்!
ஆபுத்திரனை வளர்த்துக் கைவிட்ட, அந்தணத் தந்தை யார்?
பூதி
8. மாதவி & மணிமேகலை! தாய்க்கும், மகளுக்கும்.. மிக நெருங்கிய தோழிகள் யார்? (அதே வரிசையில்)
வயந்தமாலை & சுதமதி
9. மணிமேகலையின் ஆசான் பெயர் என்ன?
அறவண அடிகள்
10. மணிமேகலை, தன் இன்னொரு தாயாகிய கண்ணகியை
"தெய்வ உருவில்" எங்கு சந்திக்கிறாள்? என்ன ஊர்?
வஞ்சி
...........................................................................................................................................
Winners are..
Aasif Niyaz |
Sethu |
meenammakayal |
Thirunavukkarasu |
SChithraSakkaravarthy |
swaminathan |
karthik |
Mythili |
ஸ்ரீதர் நாராயணன் |
Shankar narayanan |