யாவரும்கேளீர் மூலம் கல்வி உதவி தொகை வழங்குவதற்காக அதை ட்ரஸ்டா பதிவு செஞ்சிருந்தோம். கேஷ்மிண்ட் மூலம் ஓவ்வொரு மாதமும் நிதி உதவி அளிக்கப்படும்னும் சொல்லி இருந்தோம்.
ட்ரஸ்டுக்கான வங்கி கணக்கு இப்ப ஓப்பன் பண்ணியாச்சு. Anouncement Link
நவம்பர் 2016 முதல் ஜனவரி 2017 வரையான சேல்ஸ் கமிஷன் மொத்தம் 20927 ரூபாய் (After 10% TDS Deduction) ( only for NO CASHBACK Site’s ),
அதில் 50% 10463.5 ரூபாய் . இந்த தொகையானது “யாவரும் கேளிர்” ட்ரஸ்ட் க்கு அனுப்பப்பட்டு கல்வி உதவித் தொகைக்காக செலவுசெய்யப்பட்டுள்ளது.
இதுவரை “யாவரும் கேளிர்” ட்ரஸ்ட் மூலம் 92370 ரூபாய் செலவில் நான்கு மாணவ மாணவியர் அவர்களது பள்ளி/கல்லூரி படிப்பை தொடர்ந்து வருகிறார்கள். பொருளாதார சூழல் காரணமாக பள்ளி/கல்லுரி படிப்பை தொட முடியாதவர்களுக்கு இதன் மூலம் உதவி செய்யப்படுகிறது .
இதில் கேஷ்மிண்ட் வாடிக்கையாளர்களின் பங்கும் உண்டு. வாடிக்கையாளர்களுக்கு கணக்கைப் பற்றிய முழு விபரம் வேண்டுமானால் டி எம்ல் தொடர்பு கொள்ளலாம். இதே போல் ஒவ்வொரு மாதமும் அதன் கமிஷன் தொகையானது ட்ரஸ்ட் அக்கவுண்டிற்கு மாற்றப்பட்டு கல்விக்காக செலவு செய்யப்படும்.