கேஷ்மிண்ட் நடத்தும் பொங்கல் சிறப்பு கேள்வி-பதில் போட்டிகள்.
1. போட்டி நாள், இந்திய நேரம் ஜனவரி மாதம் 8ஆம் தேதி மாலை 8 மணிக்கு
2. 10 கேள்விகள், அனைத்திதிற்கும் சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும்.
3. கேள்வி-பதில்கள் தமிழிலேயே இருக்கும். அனைத்தும் தமிழ் கலாச்சாரம்/பண்பாடு சார்ந்ததாக இருக்கும்.
4. 10/10 அல்லது அதிகமான கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தவர்களே வெற்றியாளர்கள்.
5. பரிசுத் தொகை 1000 ரூ அமேசான்/ப்லிப்கார்ட் பரிசு அட்டை.
6. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வெற்றிபெற்றால் பரிசுத் தொகை பிரித்து அளிக்கப்படும். 5 பேர் வென்றால் தலா ரூ 200 பரிசு. 10 பேர் வென்றால் தலா ரூ 100 பரிசு.
7. 10 நபர்களுக்கு மேல் வெற்றிபெற்றால் நேர அடிப்படையில் முதலில் பதில்களை சமர்ப்பித்த 10 நபர்களுக்கு மட்டும் பரிசு.
8. கேள்விகள் கூகுல் விண்ணப்பத்தில் இருக்கும். ( Google Form )
9. கேள்விகள், சரியான பதில்கள், வெற்றியாளர்கள் விபரம் எல்லாம் இந்த பக்கத்தில் பதிவிட்டு, ட்விட்டரில் பகிரப்படும்.
10. #CashMintPongal hashtag wil be used in Social Medias for update
....................................................................................................................................................................
1. பொங்கல்= தை முதல் நாள் என்பது அனைவரும் அறிந்ததே!
ஆனால், அறிவியல் தமிழின் பெரும் பொழுதுகளில், தை மாதம் என்பது எந்தக் காலம்?
க) கூதிர் காலம்/ குளிர் காலம்
ச) பின்பனிக் காலம்
ஞ) கார் காலம்
2. தை முதல் நாளே= தமிழ்ப் புத்தாண்டு! (சமஸ்கிருதத் திணிப்பு இல்லாதது);
தமிழ் ஆண்டு= வள்ளுவர் ஆண்டே! என முதலில் ஆய்ந்து அறிவித்தவர் யார்?
க) தொல்காப்பியர்
ங) மு. கருணாநிதி
ச) வே. பிரபாகரன்
3. சல்லிக் கட்டு விளையாட்டில்.. மாட்டின் கொம்பிலோ/ கழுத்திலோ கட்டப்படும் "சல்லி" என்ற பரிசுப் பொதி, எந்த மரத்தின் விளாரில் இருந்து கட்டப்படுவது?
க) ஆல மர விளார்
ங) அத்தி விளார்
ச) வேப்ப மர விளார்
4. பானைகள், பல விதம்! பொங்கல் திருநாளுக்குப் பயன்படுத்தும் பானை= 'விழவின் பானை' எ. திருமணம் போன்ற விழாப் பானை வகையைச் சேர்ந்தது! இதன் நிறம் என்ன?
க) சிவப்பு
ச) கருப்பு
ஞ) உட்புறம் கருப்பு, வெளிப்புறம் சிவப்பு
5. பொங்கல் பானையில் கட்டப்படும் மஞ்சள் வேர்க் கொடி, எந்த மஞ்சள் வகையைச் சார்ந்தது? (நற்றிணையும் இந்த மஞ்சளைப் பாடும்)
க) விரலி மஞ்சள்
ங) கஸ்தூரி மஞ்சள்
ச) காஞ்சிரத்த மஞ்சள்
6. "ஏறு தழுவதல்" எ. சல்லிக் கட்டு!
ரோமாபுரி Matador போல் கொம்பு முறித்து, வன்முறை கிடையாது! பெயரிலேயே "தழுவுதல்", ஏதோ பெண்ணைத் தழுவுதல் போலே:) மாட்டின் திமில் தழுவிப் பரிசை எடுத்தல் மட்டுமே!
"ஏறு தழுவலை", மிகுதியாகப் பாடும் சங்கத் தமிழ் நூல் எது?
க) புறநானூறு
ச) குறுந்தொகை
ஞ) பதிற்றுப் பத்து
7. போகிப் பண்டிகை= பழையன போவதால் Pogi! அது Bhogi அல்ல! ஆண்டின் இறுதி நாளில், வேண்டாத பொருட்களைப் போக்கி, புது ஆண்டுக்கு வரவேற்பு நல்குதல்!
போகி அன்று வீட்டுக் கூரையில் நாட்டப்படும் பூங்கொத்தில் உள்ள பூக்கள் யாவை?
ங) பூலாப் பூ, வேப்பம் பூ, மஞ்சள் பூ
ச) மஞ்சள் பூ, கரும்புப் பூ, பூசணிப் பூ
ஞ) கரும்புப் பூ, பூசணிப் பூ, வேப்பம் பூ
8. சங்கத் தமிழில் பரவலாகப் போற்றப்படும் தை மாதம்= ஆற்றில் புது வெள்ளம் வரும், "தைஇத் திங்கள் தண் கயம்"; தைந் நீராடல்!
தைத் திங்கள் என்பதை, இலக்கியத்தில் "தைஇத்" திங்கள் எ. சொல்லுதல் என்ன இலக்கணக் குறிப்பு?
க) ஒற்றளபெடை
ங) இன்னிசை அளபெடை
ஞ) சொல்லிசை அளபெடை
9. கரும்பு, தமிழகத்துக்கு வந்த காலம், 500 BCE! அதிலும் வெல்லம் மட்டுமே ஆட்டி எடுத்தனர்!
சர்க்கரை எடுத்தது சீனர்களே ஆதலால் சீனி எனப்பட்டது!
அதற்கு முன், "சமையல்” இனிப்புச் சுவைக்குத் தமிழர்கள் பயன்படுத்தியது என்ன?
ங) பனங் கருப்பட்டி, இலுப்பைப் பூ, கள்
ச) பனங் கருப்பட்டி, இளநீர், பதநீர்
ஞ) தேன், கள், நாட்டுச் சருக்கரை
10. தமிழ்ச் சினிமாவில் பொங்கல் பாடல்கள் பலப்பல!
சிவாஜி/ எம்.ஜி.ஆர் முதல், கமல்ஹாசன் மகாநதி வரை..
ஆனால், பலரின் வாழ்க்கையிலும் நம்பிக்கையூட்டும் இனிய பொங்கல் வரிகள்= தைப் பொறந்தால் வழி பொறக்கும், தங்கமே தங்கம்!
இதை எழுதிய & பாடிய பெண் பாடகர் யார்? (ஆண் பாடகர்= TMS ஐயா)
க) கண்ணதாசன் & பி.சுசீலா
ங) வாலி & பி.லீலா
ச) கண்ணதாசன் & எல்.ஆர். ஈஸ்வரி
***பொங்கல் சிறப்புக் கேள்வி:
11. சம்பா சாகுபடி, சம்பா பயிர் என்றெல்லாம் வானொலி/ தொலைக்காட்சி/ ஐயா நம்மாழ்வார் பேசக் கேட்டிருப்பீர்கள்!
சீரகச் சம்பா, சிறுமணிச் சம்பா, பெருமணிச் சம்பா, குண்டுச் சம்பா, குடகுச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, வரகுச் சம்பா.. எனப் பலப்பல சம்பா நெல்!
தமிழில், " சம்பா" என்றால் என்ன? பெயர்க் காரணம் கூறுக! பொங்கல் வாழ்த்துக்கள்!:)
ள) சம்பா = கைக்குத்தல் நெல்
ற) சம்பா = ஈழப் பெயர்
ன) சம்பா = சம்ஸ்கிருத/ சம்பு, சிவபெருமான் பெயர்
.................................................................................................................................................