வாட்ஸ் அப் ஃபேஸ்புக்கிற்கு சவால் விடும் கூகுளின் புதிய ஆப்ஸ்!

May 24, 2016


  ன்று ஒவ்வொரு இளைஞனின் நேரத்தையும் விரல்களையும் ஆண்டு கொண்டிருப்பவை இரண்டே இரண்டு தான். ஒன்று ஃபேஸ்புக் மற்றொன்று வாட்ஸ் அப். ஸ்மார்ட் போன்களில் சிம்கார்டு கூட இல்லாமல் இருக்கும். ஆனால் அந்த இரு ஆப்களும் இல்லாமல் ஒரு போனைக் கூடப் பார்த்திடமுடியாது. பல காதல்கள் ஃபேஸ்புக்கில் தொடங்கி வாட்ஸ் அப் வழியே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவ்விரு ஆப்களுக்கும் போட்டியாக ‘ஆலோ’, ‘டுவோ’ என இரு ஆப்களை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.


இன்றைய காலகட்டத்தில் ஃபேஸ்புக்கைக் காட்டிலும் வாட்ஸ் அப் தான் அதிகம் பயன்பாட்டிலுள்ளது. போதாக்குறைக்கு மல்டிமீடியாவிலிருந்து பி.டி.எஃப் பைல்கள் வரை அனைத்தையும் அதிலேயே ஷேர் செய்யுமளவிற்கு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் கூடிய விரைவில் ஜி-மெயிலே தேவையில்லாமல் போகும் நிலை ஏற்படும் என்று பேசப்பட்டது. அதேசமயம் ஃபேஸ்புக்கின் சிறப்புகளையும் நாம் ஒதுக்கிவிடமுடியாதே. உலகின் ஏதோ ஒரு மூலையில் உள்ளவரோடு நட்பு பாராட்ட உதவும் ஃபேஸ்புக்கில் இன்று சிறுவண்டுகள் கூட லைக்ஸ் தட்டிக்கொண்டிருக்கின்றன. இரண்டே ஆப்கள் –ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என வைத்துக்கொண்டு மொத்த டெக்னாலஜி உலகையும் ஆண்டுகொண்டிருக்கிறார் சூக்கர்பெர்க். ஒரு காலத்தில் உலகையே வியக்கவைத்துக் கொண்டிருந்த கூகுளால் சும்மா இருக்க முடியுமா? 
 

அவர்களும் கூகுள் பிளஸ், ஹேங் அவுட், மெசெஞ்சர் என எத்தனையோ ஆப்களை அறிமுகப்படுத்தியும் அவ்விரண்டு ஆப்களையும் ஓவர்டேக் செய்ய முடியவில்லை. எனவே எப்படியேனும் ஆப் உலகத்தை ஆள வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் இப்போது இந்த இரு புது ஆப்கள். மெசேஜிங் ஆப்பான ‘ஆலோ’வில் ,தற்போது வாட்ஸ் அப்பில் அப்டேட் ஆகியிருக்கும் மெசேஜ்களை பாதுகாக்கும் ‘என்கிரிப்ஷன்’ வசதியோடு, நமக்கு வரும் மெசேஜ்களுக்கு தானாக ரிப்ளை செய்யும் ஆல்ஷன்களும் உள்ளன. இதன்மூலம் நாம் ரிப்ளை செய்ய டைப் செய்ய வேண்டிய அவசியம் கூட இருக்காதாம். யாரேனும் ‘ எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்டால், ‘நன்றாக இருக்கிறேன்’ என்ற பதில் ஒரு ஸ்மைலியோடு ஸ்கிரீனில் சஜெஷனாகக் காட்டும்.

மிக மோசமான சூழ்நிலையில் கூட துல்லியமான வீடியோ காலிங் செய்ய உதவுவதே டுவோ ஆப்பின் மிகப்பெரிய பலம். பிற ஆப்களைப் போல் கால் செய்து சில நேரம் கழித்து லோட் ஆகாமல், உடனுக்குடனேயே கால்கள் இணைக்கப்படுகின்றன. இதனால் வீடியோ காலிங் ஆப்களில் டுவோ ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    

இந்த இரு ஆப்களும் ஆன்டிராய்டு மற்றும் ஐ-ஓஸ் மொபைல் தளங்களில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் அளவிற்கு வெற்றி பெரும் அளவிற்குப் பெரிதாக இந்த ஆப்களில் ஏதுமில்லை என்கிறார்கள் கேட்ஜெட் கில்லாடிகள். சூக்கர்பெர்க்கின் ஐடியாவைத் தாண்டி கூகுளால் ஏதேனும் சாதிக்க முடியுமா? ஏன் முடியாது? ஆளும் நாற்காலியில் அமர்ந்திருப்பது ஒரு தமிழனல்லவா. சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து சிலிகான் வேலியை ஆண்டு வரும் சுந்தரால் சாதிக்க முடியாமல் போய் விடுமா என்ன? கமான் சுந்தர் கமான்!
    

- மு.பிரதீப் கிருஷ்ணா - 

நன்றி: விகடன்

read other news...

Steps to Earn Cashback

1. Join CashMint FREE

2. Visit Retailers via CashMint & Shop

3. Earn Cashback

4. Transfer to Bank as REAL CASH

Featured Stores

Top Stores

New Stores