பெரியார் பிறந்த நாள் கேள்வி-பதில் போட்டிகள்

September 17, 2017

கேஷ்மிண்ட் நடத்தும் தந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்பு கேள்வி-பதில் போட்டிகள்.

1. போட்டி நாள், இந்திய நேரம் செப்டம்பர்  17ஆம் தேதி மாலை 8 மணிக்கு

2. 10 கேள்விகள், அனைத்திற்கும் சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும்.

3. கேள்வி-பதில்கள் தமிழிலேயே இருக்கும்.

4. 10/10 அல்லது அதிகமான கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தவர்களே வெற்றியாளர்கள்.

5. பரிசுத் தொகை 1000 ரூ அமேசான்/ப்லிப்கார்ட் பரிசு அட்டை. சிறப்பு பரிசாக பெரியார் புத்தகங்கள் கிடைக்கும்.

6. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வெற்றிபெற்றால் பரிசுத் தொகை பிரித்து அளிக்கப்படும். 5 பேர் வென்றால் தலா ரூ 200 பரிசு. 10 பேர் வென்றால் தலா ரூ 100 பரிசு. 

7. 10 நபர்களுக்கு மேல் வெற்றிபெற்றால் நேர அடிப்படையில் முதலில் பதில்களை சமர்ப்பித்த 10 நபர்களுக்கு மட்டும் பரிசு.

8. கேள்விகள் கூகுல் விண்ணப்பத்தில் இருக்கும். ( Google Form )

9. கேள்விகள், சரியான பதில்கள், வெற்றியாளர்கள் விபரம் எல்லாம் இந்த பக்கத்தில் பதிவிட்டு, ட்விட்டரில் பகிரப்படும்.

10. #CashMintquiz hashtag will be used in Social Medias for update

11. 100 நபர்கள் போட்டியில் பதில்களை சமர்ப்பிக்கும் வரை போட்டிகள் நடந்து கொண்டு இருக்கும்.

....................................................................................................

Correct Answers...

 

 

1. குடி அரசு பத்திரிக்கை தொடங்கிய 1925-ஆம் ஆண்டு பெரியாருடன் ஆசிரியராய் இருந்தவர் யார்?


b) வா.மு.தங்கபெருமாள் பிள்ளை

 

2. நான்காவது முறையாக வகுப்புரிமைத் தீர்மானம் கொண்டு வர முயன்று முடியாமல் 'இனி காங்கிரசை ஒழிப்பதே எனது வேலை' என்று துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வெளியேறினார் பெரியார். காஞ்சிபுரத்தில் நடந்த அம்மாநாட்டுக்குத் தலைவராய் இருந்து 'போது நன்மைக்காக இத் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது' என்று கூறி அனுமதி மறுத்தவர் யார்?

d) திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார்

 

3.  1932 ஆம் ஆண்டு ரஷ்யா சென்ற பெரியார் அங்கு இருந்த எந்த அமைப்பில் தன்னை ஒரு உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டார்.?


a) மத எதிர்ப்பு பிரச்சார அலுவலகம் (Anti-Religious Propaganda Office

 

4. பாரதி பாடல் புரட்டு என்ற கட்டுரையில், ‘மண்ணும் இமயமலை எங்கள் மலையே’ என்ற பாடலின் அடியில் ‘உன்னத பாரத நாடெங்கள் நாடே’ என்னும் வரியை திருத்திப் பதிப்பித்து இருப்பதாக குற்றம் சாட்டுகிறார். பாரத நாடு என்னவாக திருத்தப்பட்டது?

b) ஆரிய நாடு

 

5. இவற்றில் எந்தப் புனைப் பெயரில் பெரியார் எழுதவில்லை?

 d) சமதர்மன்

 

6. "குடி அரசை" ஒழிக்கச் செய்த முயற்சியால் ____X_____ தோன்ற வேண்டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்களின் அதாவது பெரும்பான்மையான மக்களின் ஆட்சியாகிய குடி அரசுக்கு உலகில் இடமில்லையானால் கண்டிப்பாக ____X____ தோன்றியேதான் ஆக வேண்டும்.!  X என்பது என்ன?  

a) புரட்சி

 

7. வெள்ளிப்பூண் பூட்டிய பழைய அடிமை விலங்கு மாற்றப்பட்டு தங்கப்பூண் பூட்டிய புதிய விலங்கு பூட்டப்பட்டது என பெரியார் சொன்னது எதைக் குறித்து?

b) ஆங்கிலேயர் ஆட்சி முடிந்து பார்ப்பனிய பனியா ஆட்சி ஏற்படும் என்பதைக் குறிக்க

 

8. 1948-ல் ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் ‘திராவிடப் பிரிவினை நாள்’   

எனக் கொண்டாடக் கேட்டுக் கொண்டார்.

   
  b) ஜூலை 1
   

9.  பெரியார் திரைப்படத்தில் வரும் இந்தப் பெண்மணியின் கதாப்பாத்திரத்தின் பெயர் என்ன?
 

    b) மூவலூர் ராமாமிர்தம்
 

 

10. சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை பெரியார் 1957 நவம்பர் 26 எரிக்கச் சொன்னார். அது இவற்றில் எந்தப் பிரிவு?

      a) 26 ஆவது பிரிவு
    
 

...........................................................................................

 WINNERS WILL BE UPDATED HERE LATER

read other news...

Steps to Earn Cashback

1. Join CashMint FREE

2. Visit Retailers via CashMint & Shop

3. Earn Cashback

4. Transfer to Bank as REAL CASH

Featured Stores

Top Stores

New Stores