கேஷ்மிண்ட் நடத்தும் திருக்குறள் சிறப்பு கேள்வி-பதில் போட்டிகள்.
1. போட்டி நாள், இந்திய நேரம் ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி மாலை 8 மணிக்கு
2. 10 கேள்விகள், அனைத்திற்கும் சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும்.
3. கேள்வி-பதில்கள் தமிழிலேயே இருக்கும்.
4. 10/10 அல்லது அதிகமான கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தவர்களே வெற்றியாளர்கள்.
5. பரிசுத் தொகை 1000 ரூ அமேசான்/ப்லிப்கார்ட் பரிசு அட்டை.
6. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வெற்றிபெற்றால் பரிசுத் தொகை பிரித்து அளிக்கப்படும். 5 பேர் வென்றால் தலா ரூ 200 பரிசு. 10 பேர் வென்றால் தலா ரூ 100 பரிசு.
7. 10 நபர்களுக்கு மேல் வெற்றிபெற்றால் நேர அடிப்படையில் முதலில் பதில்களை சமர்ப்பித்த 10 நபர்களுக்கு மட்டும் பரிசு.
8. கேள்விகள் கூகுல் விண்ணப்பத்தில் இருக்கும். ( Google Form )
9. கேள்விகள், சரியான பதில்கள், வெற்றியாளர்கள் விபரம் எல்லாம் இந்த பக்கத்தில் பதிவிட்டு, ட்விட்டரில் பகிரப்படும்.
10. #CashMintquiz hashtag will be used in Social Medias for update
.......................................................................................................................
CONTEST CLOSED
CORRECT ANSWERS AS BELOW
WINNER WILL BE ANAOUNCED SOON
......................................................................................................................
1. திருக்குறளில், 1-9 எண் வரிசையில், ஐயன் வள்ளுவன் "பயன்படுத்தப்படாத" ஒரே எண் எது?
அ) 5
ஆ) 8
இ) 1
ஈ) 9
2. அதே குறளில் ஒரு சொல்.. மீண்டும் மீண்டும் வருதல்! சொற்பொருள் பின்வரு நிலையணி;
அப்படி ஒரே குறளில், "மிக நிறைய முறை" பயின்று வரும் சொல் எது?
அ) நாடு
ஆ) பற்று
இ) சொல்
ஈ) பொருள்
3. திருக்குறளுக்கு உரை எழுதிய, "முதன்முதல் உரையாசிரியர்" யார்?
அ) பரிமேலழகர்
ஆ) மணக்குடவர்
இ) தருமர் எ. தருமசேனர்
ஈ) பரிப்பெருமாள்
4. வர்ணாஸ்ரம ஜாதியை முன்வைக்கும் வேதநெறியைக் கண்டிக்கும் ஐயன் வள்ளுவன்!
"பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்!" என்று மறுத்துப் பாடுகிறான்.
மிகவும் புகழ்பெற்ற இந்தக் குறள், எந்த அதிகாரத்தில்/ எந்த இயலில் வருகிறது?
அ) ஒழுக்கம் உடைமை/ இல்லறவியல்
ஆ) பெருமை/ குடி இயல்
இ) அறன் வலியுறுத்தல்/ பாயிர இயல்
ஈ) நடுவுநிலைமை/ அரசு இயல்
5) ஐயன் வள்ளுவன், சங்கத் தமிழ் வாசிப்பு உள்ளவர்!
சங்கத் தமிழின் அதே சொல்/கருத்தை, தமது குறளிலும் வைத்துள்ளார்!
புற400 பாடல் - "யாதும் ஊரே யாவரும் கேளிர்" - என்ற கருத்தியலை, ஐயன் வைக்கும் அதிகாரம் எது?
அ) பெரியாரைப் பிழையாமை
ஆ) கல்வி
இ) கள்ளுண்ணாமை
ஈ) ஊழ்
6) திருக்குறளை, உரையில்லாமல் மூலம் மட்டும், முதன்முதலில் தாளில் அச்சேற்றியவர் யார்?
அ) உ. வே. சா
ஆ) வீரமாமுனிவர்
இ) ஞானப்பிரகாசர்
ஈ) ஜி.யு. போப்
7) திருக்குறளில், ஒரே அடி.. 2 முறை வரும் குறட்பாக்கள் மொத்தம் 5!
"மெய்ப்பொருள் காண்பது அறிவு" = இது இரண்டாம் அடி!
இந்த ஈற்றடி.. 2 முறை, வெவ்வேறு அதிகாரங்களில் வந்துள்ளது; அந்த அதிகாரங்கள் யாவை?
அ) கல்வி & அறிவுடைமை
அ) அறிவுடைமை & மெய்யுணர்தல்
இ) கல்வி & தெரிந்துசெயல்வகை
ஈ) தெரிந்துசெயல்வகை & தெரிந்துதெளிதல்
8) இறை எ. God பொருளில், ஐயன்.. தமது குறட்பாக்களில் பயன்படுத்தாத சொல் எது?
அ) தெய்வம்
ஆ) இறைவன்
இ) கடவுள்
ஈ) தேவர்
9) திருக்குறள் = 3 பால், 13 இயல், 133 அதிகாரம், 1330 குறள் கொண்டது! நாம் அறிந்ததே!
இவற்றுள்... ஒரேயோர் அதிகாரம் மட்டுமே கொண்ட இயல் எது? மிக நிறைய அதிகாரங்கள் கொண்ட இயல் எது?
அ) ஊழ்/கூழ் இயல் | இல்லறவியல்
ஆ) அரண்/படை இயல் | களவியல்
இ) அரண்/படை இயல் | கற்பியல்
ஈ) ஊழ்/கூழ் இயல் | அரசியல்
10. திருக்குறள் காமத்துப்பாலில், "முத்தம்" எ. சொல்லை, ஐயன் எத்தனை முறை பயன்படுத்துகிறார்?
அ) 10
ஆ) 5
இ) 1
ஈ) 12